» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு : தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
திங்கள் 12, ஜூலை 2021 9:02:52 PM (IST)
நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மே மாதத்தில் தேசிய தேர்வு முகமை நடத்திவரும் இந்தத் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.
கரோனா இரண்டாம் அலை காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வையும் ரத்து செய்யவேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தின. ஆனால், மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு எதிராக நீட் தேர்வை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக, தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை 155ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை நாளை மாலை 5 மணிமுதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் என்கவுண்ட்டரில் கொலை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:31:54 AM (IST)

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

மக்களின் ஒருவன்Jul 13, 2021 - 03:35:33 PM | Posted IP 162.1*****