» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பு

வியாழன் 15, ஜூலை 2021 12:09:51 PM (IST)

புதுச்சேரியில் பெற்றோர்கள், அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கும் தேதியை அரசு தள்ளி வைத்துள்ளது. 

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தமிழகத்தில் சற்று குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த கல்வியாண்டின் இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் மீண்டும் தொற்று அதிகரித்ததால் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டே இருக்கின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் வருகிற 16-ந் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனை சந்தித்து ஆலோசனை நடத்திய புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம், கரோனா குறைந்த பிறகே திறக்கப்படும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் அறிவித்தார். கரோனா பரவல் இருக்கும் நிலையில், மாணவர்களின் பெற்றோர், அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory