» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேற்கு வங்கத்திற்கு தவறான பெயரை பெற்று தருகின்றனர்: மம்தா குற்றச்சாட்டு

வியாழன் 15, ஜூலை 2021 5:30:18 PM (IST)

பிரதமர் நேரம் ஒதுக்கினால் அவரை சந்திப்பேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பேசுகையில், மாநிலத்தில் தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளது. ஆகையால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, தில்லி சென்று சில தலைவர்களை சந்திக்கவுள்ளேன். குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நேரம் ஒதுக்கினால் அவர்களையும் சந்திப்பேன்.

மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்க மூன்று திட்டங்களை அறிவிக்கவுள்ளோம். புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திட்டங்கள் கொண்டுவரவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். எங்கள் மாநிலத்திற்கு 14 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றது. ஆனால், 2.12 கோடி கரோனா தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், 18 லட்சம் தடுப்பூசிகளை நாங்கள் வாங்கியுள்ளோம். சில மாநிலங்களுக்கு அதிகளவிலான தடுப்பூசிகள் கிடைக்கின்றது, சில மாநிலங்களுக்கு கிடைப்பதில்லை.

மேலும், உத்தரப்பிரதேசத்தில் சட்டத்தை பின்பற்றாதது பிரதமருக்கு தெரியும். ஹாத்ராஸ் சம்பவம் போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது, அங்கு எவ்வளவு முறை ஆணையத்தை விசாரணைக்காக அனுப்பியுள்ளார்? மேற்கு வங்கத்திற்கு தவறான பெயரை பெற்று தருகின்றனர். அதிகளவிலான வன்முறைகள் வாக்குப்பதிவுக்கு முன்பே நடைபெற்றவை, ஆனால் வாக்குப் பதிவுக்கு பின்பு எனக் கூறப்படுகிறது.

மனித உரிமைகள் ஆணையம், விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு வழங்குவதற்கு முன்பே வெளியே கூறிவிட்டார்கள். இது நீதிமன்ற அவமதிப்பாகும். மேற்கு வங்க மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயலாகும் எனத் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory