» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேக்கேதாட்டு அணை கட்ட சாத்தியக் கூறு இல்லை: மத்திய அமைச்சர் உறுதி... துரைமுருகன் தகவல்!

வெள்ளி 16, ஜூலை 2021 3:43:31 PM (IST)

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில், கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் உறுதி அளித்திருப்பதாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேக்கேதாட்டுவில் கா்நாடகம் கட்டுவதற்கு உத்தேசித்துள்ள அணை திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழக சட்டப் பேரவைக் கட்சிகள் குழு தில்லி சென்று, அங்கு மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்தை இன்று சந்தித்துப்  பேசினர். 

புது தில்லியில் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியது என்ன என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார். அதில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி தரக் கூடாது என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். தமிழக சட்டப்பேரவை கட்சிகள் குழுவிடம், மத்திய அமைச்சர் சில தகவல்களை பகிர்ந்து கொண்டதோடு, முக்கிய உறுதிமொழிகளையும் அளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory