» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெற்றியும் தோல்வியும் இயல்பு: இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு உற்சாகமூட்டிய பிரதமர் மோடி!

செவ்வாய் 3, ஆகஸ்ட் 2021 11:54:50 AM (IST)

வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்று இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வியைத் தழுவிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

வெற்றியும் தோல்வியும் சகஜம். அதுவும் வாக்கையின் ஒரு பகுதிதான். ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர் சிறப்பாக விளையாடினார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியின் ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

இந்திய - பெல்ஜியம் ஆடவர் ஹாக்கி அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா 2 - 5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் போராடி தோல்வியடைந்தது. இந்திய வீரர்கள் ஹர்மன்ப்ரீத் சிங் (7வது நிமிடம்), மந்தீப் சிங் (8வது நிமிடம்) கோல் அடித்தனர்.  பெல்ஜியம் அணி வீரர் அலெக்ஸாண்டர் (19, 49, 53வது நிமிடங்களில்) 3 கோல்களை அடித்து அணிக்கு பலம் சேர்த்தார். அவருடன், லோயிக் (2வது நிமிடம்), ஜான்-ஜான் டோஹ்மென் (60வது நிமிடம்) தலா ஒரு கோல்களை அடித்து அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணி 5 - 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற வழிகோலினர்.

ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால், இந்திய ஆடவர் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோதவுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆஸ்திரேலியா - ஜெர்மனி ஆடவர் ஹாக்கி அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடையும் அணியுடன், இந்திய ஆடவர் ஹாக்கி அணி, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் விளையாட உள்ளது.

41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றும், அரையிறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் கனவு நிறைவேறாமலேயே போனது. எனினும், ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory