» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெகாசஸ் விவகாரத்தால் எதிர்க்கட்சிகள் அமளி: 11-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

செவ்வாய் 3, ஆகஸ்ட் 2021 4:16:00 PM (IST)

பெகாசஸ் விவகாரத்தால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் தொடர்ந்து 11வது நாளாக முடங்கியது.

இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் மூலம் இ்ந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசின் மீது கடுமையாக குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய   நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  நாடாளுமன்றம் இன்று காலை கூடியதும் எதிர்க்கட்சிகள் இன்றும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் கூடியது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory