» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு கண்டனம் : ராகுல்காந்தி தலைமையில் சைக்கிள் பேரணி!!

செவ்வாய் 3, ஆகஸ்ட் 2021 4:33:30 PM (IST)



பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ராகுல்காந்தி நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் சபை நடவடிக்கைகளை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. விவசாயிகள் பிரச்சினை, பெகாசஸ் டெலிபோன் ஒட்டுகேட்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றை எழுப்பி சபையை நடத்த விடாமல் செய்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் சபை முடங்கி வருகிறது. 

பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர்கள், சுப்ரீம் கோர்ட்  நீதிபதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசே நடத்தியுள்ள செயலாக இருக்கிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் வாதம் நடத்த வேண்டும். விவாதத்தின் போது பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை நாடாளுமன்றம் 12 நாட்கள் நடைபெற்றுள்ளது. 12 நாட்களில் ஒருநாள் கூட சரியாக இயங்கவில்லை.அமளிக்கு மத்தியிலும் முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. இந்நிலையில்  இன்று  14 எதிர்க்கட்சிகள் இன்று ஒன்றாக கூடி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போட்டி பாராளுமன்றத்தை வெளியில் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.மேலும் ‘பெகாசஸ்’ மற்றும் பெட் ரோல்- டீசல் விலை உயர்வை சுட்டிக் காட்டும் வகையில் பாராளுமன்றத்துக்கு எம்.பி.க்கள் சைக்கிளில் செல்வது  என்று முடிவு எடுத்தனர்.

கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா, தேசியவாத காஙிரஸ் சுப்ரியா சுலே, சிவசேனாவின் சஞ்சய் ராவத் , தி .மு.க. சார்பில் கனிமொழி எம்.பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

அதேபோன்று தற்போதைய சூழ்நிலையில் விலைவாசி உயர்வு என்பது கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பெட்ரோல். டீசல் விலை  உயர்வு. இந்த   விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே இதை தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் இதுதொடர்பான பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, பா.ஜ.க.,ஆர்.எஸ்.எஸ் -க்கு எதிராகநாம் அனைவரும் ஒருங்கிணைந்து வலிமையான இயக்கமாக மாற வேண்டும். நமது குரல் சக்தி வாய்ந்ததாக ஒலிக்க வேண்டும்என்று கூறினார். எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ராகுல்காந்தி  நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்றார். அவருடன் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.மத்திய அரசை பொறுத்தவரையில் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி வருவதால் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் சென்றுகொண்டுள்ளது. 


மக்கள் கருத்து

vijayAug 6, 2021 - 10:18:22 AM | Posted IP 173.2*****

eppothu thaan thoongi enthichi erukaru poola

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory