» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்றத்துக்கு சைக்கிள் பயணம்: ராகுல் காந்தியின் மலிவான விளம்பர யுக்தி - பா.ஜனதா தாக்கு

புதன் 4, ஆகஸ்ட் 2021 10:29:18 AM (IST)

மோடியை தாக்குவதாக நினைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினர் இந்தியாவைத் தாக்குகின்றனர் என பாஜக தெரிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி தலைவர்களுடன் மதிய உணவு நேர சந்திப்பை நிகழ்த்தி, நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் சென்றநிலையில், அவர் மீது பா.ஜ.க. தாக்குதல் தொடுத்துள்ளது. பா.ஜ.க. தலைமை செய்தி தொடர்பாளர் அனில் பாலுனி கூறுகையில், ‘ராகுல் காந்தி டிராக்டர், சைக்கிள் ஓட்டுவது போன்ற மலிவான விளம்பர யுக்திகளில் ஈடுபடுகிறாரே தவிர, நாடாளுமன்றத்தை நடத்துவதைப் பற்றி அவருக்கு அக்கறையில்லை’ என்றார். 

மத்திய மந்திரியும், மாநிலங்களவை துணைத்தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி, ‘பா.ஜ.க.வுக்கு எதிரான குழுவின் தலைவராக தங்களை காட்டிக்கொள்வதற்காக, நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கு இடையூறு செய்வதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாண்டிச் செயல்படுகின்றனர்.  மோடியை தாக்குவதாக நினைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினர் இந்தியாவைத் தாக்குகின்றனர்’ என்று குற்றம்சாட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory