» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கால அவகாசம்

புதன் 4, ஆகஸ்ட் 2021 11:27:28 AM (IST)

வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையில் மின்னணு முறையில் வரி செலுத்துபவர்களின் நலன் கருதி பல்வேறு படிவங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக காலாண்டு அறிக்கை படிவம் 15 சிசி மற்றும் 2020-2021-ம் நிதியாண்டுக்கான சமநிலை வரி அறிக்கை படிவம் எண்-1 ஆகியவை வருகிற 31-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

அதேபோல், முந்தைய ஆண்டான 2020-2021-ம் ஆண்டிற்கான முதலீட்டு நிதியால் செலுத்தப்பட்ட அல்லது வரவு வைக்கப்படும் வருமான அறிக்கை படிவம் எண்-64 டி மற்றும் 64-சி படிவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்க வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் www.incometaxindia.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதள முகவரியிலும் வெளியிடப்பட்டு உள்ளது என்று வருமான வரித்துறை கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory