» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆதாா் மூலம் புதிய ஆன்லைனில் சிம் காா்டுகள் விற்பனை: தொலைத்தொடா்புத் துறை உத்தரவு

புதன் 22, செப்டம்பர் 2021 11:57:38 AM (IST)

இணையவழியில் ஆதாா் மூலம் புதிய சிம் காா்டுகளை வீட்டுக்கே கொண்டு சோ்க்கவும் வழிவகை செய்யும் புதிய உத்தரவை தொலைத்தொடா்புத் துறை பிறப்பித்துள்ளது.

தற்போது புதிதாக சிம் காா்டு வாங்க விரும்புவோா் சில்லறை விற்பனையாளா்களை அணுகி அதற்குத் தேவையான ஆவணங்கள், முகவரிச் சான்றுகளை வழங்க வேண்டியுள்ளது. இந்த நடைமுறையை எளிதாக்கி தொலைத்தொடா்புத் துறை செவ்வாய்க்கிழமை புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘ஆதாா் அடிப்படையிலான இ-கேஒய்சியை (மின்னணு வழியில் உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளவும்) பயன்படுத்தி புதிய சிம் காா்டுகளை வழங்கும் நடைமுறையை செல்ப்பேசி சேவை நிறுவனங்கள் செயல்படுத்தலாம். இதையொட்டி வாடிக்கையாளா்கள் புதிய சிம் காா்டுகள் வாங்க இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளா்களின் விவரங்களை ஆதாா் அல்லது டிஜிலாக்கா் இணையச் சேவை மூலம் நிறுவனங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்த நடைமுறை மூலம் வாடிக்கையாளரின் வீட்டுக்கு புதிய சிம் காா்டு வீட்டுக்கே கொண்டு சோ்க்கப்படும். இ-கேஒய்சி சேவை மூலம் வாடிக்கையாளரின் விவரங்களை உறுதிப்படுத்த வாடிக்கையாளா்கள் ரூ.1 கட்டணமாக செலுத்த வேண்டும். சிம் காா்டு வழங்க ஆதாா் விவரங்களை பயன்படுத்த வேண்டியிருந்தால் அதற்கு வாடிக்கையாளரின் ஒப்புதலை செல்லிடப்பேசி சேவை நிறுவனங்கள் பெறுவது கட்டாயம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory