» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம்: ராகுல் காந்தியுடன் முதல்வர் சரண்ஜீத் ஆலோசனை

வெள்ளி 24, செப்டம்பர் 2021 3:27:30 PM (IST)

பஞ்சாப் மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி ஆலோசனை நடத்துகிறார்.

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னியும், இரண்டு துணை முதல்வர்களும் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி இல்லத்தில் இன்று மாலை முதல்வர் சரண்கீத் சிங் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பின்பு விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவைக் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங்குக்கும், அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், அமரீந்தா் சிங்கின் எதிா்ப்பை மீறி சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கட்சித் தலைமை கடந்த ஜூலை மாதம் நியமித்தது. அதன்பிறகு இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இந்தச் சூழலில், அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை கடந்த சனிக்கிழமை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory