» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் 761 பேர் தேர்ச்சி : பிரதமர் மோடி வாழ்த்து
சனி 25, செப்டம்பர் 2021 12:05:47 PM (IST)
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.ஆர்.எஸ் மற்றும் ஐ.ஆர்.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மத்திய குடிமைப் பணியிடங்களுக்கான யூ.பி.எஸ்.சி. தேர்வானது ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 2020 அக் டோபர் மாதம் நடைபெற்ற யூ.பி.எஸ்.சி.தேர்வு இறுதி முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 761 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 545 ஆண்கள் மற்றும் 216 பெண்கள் அடங்குவர் யூ.பி.எஸ்.சி தேர்வில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபாம் குமார் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ஜாக்ரதி அவஸ்தி முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தினார்.பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியதாவது; முக்கியமான காலகட்டத்தில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை ஏற்க இருக்கும் உங்களுக்கு உற்சாகமான மற்றும் திருப்திகரமான பொது சேவை காத்திருக்கிறது.யூ.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, நீங்கள் மிகவும் திறமையான நபர்கள். இன்னும் பல முயற்சிகள் காத்திருக்கின்றன. அதே நேரத்தில் இந்தியா பல்வேறு வாய்ப்புகளைக் கொடுக்க இருக்கிறது. மனம் தளரவேண்டாம்” என்று அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)
