» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் இணைக்க முடிவு: மத்திய அமைச்சரவையிடம் வரைவு அறிக்கை

சனி 25, செப்டம்பர் 2021 12:34:43 PM (IST)

திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்திய சமூக நீதித் துறை  மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அதன்பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வக்கப்படும். இட ஒதுக்கீடு பெற ஏதுவாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் திருநங்கைகளை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்தது.

மூன்றாம் பாலினத்தவரை சம நிலையில், சம அந்தஸ்தில் வைத்து மதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டின் கீழ் திருநங்கைகள் பயன்பெறும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓபிசி பட்டியலில் திருநங்கைகள் இடம்பெற்றால், அரசுப் பணிகளில் அவர்களுக்கான பணியிடங்கள் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory