» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உணவில் போதை மருந்து கலந்து 17 மாணவிகள் பலாத்காரம்: பள்ளி மேலாளர்கள் 2பேர் கைது

செவ்வாய் 7, டிசம்பர் 2021 5:35:10 PM (IST)

உத்தரபிரதேசத்தில் உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து 17 பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் முசாபாத்நகர் பகுதியில் 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 17 பேரை சம்பவத்தன்று இரவு அந்த பள்ளியின் மேலாளர்கள் செய்முறை தேர்வு என கூறி ஒன்றாக அழைத்து சென்றனர். அப்போது ஆசிரியைகள் யாரும் உடன் செல்லவில்லை. அந்த மாணவிகளுக்கு கிச்சடி உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

ஆனால் 2 பள்ளி மேலாளர்களும் அந்த உணவுகளை தூக்கி எறிந்து விட்டு புதிதாக போதை மருந்து கலந்த உணவுகளை மாணவிகளுக்கு சாப்பிட கொடுத்தனர். பின்னர் 2 பேரும் அந்த மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் பரீட்சையில் பெயிலாக்கி விடுவதாகவும், குடும்பத்தை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.

இதனால் பயந்து போன அந்த மாணவிகள் இதுபற்றி பெற்றோர்களிடம் எதுவும் கூறவில்லை. மறுநாள் 17 மாணவிகளும் பள்ளிக்கு செல்லவில்லை. அதன்பிறகுதான் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து இதுபற்றி அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த கொடூர செயலில் பள்ளி மேலாளர்கள் யோகேஷ்குமார், அர்ஜுன் சிங் ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக அவர்கள் மீது போக்சே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விரைவில் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இச்சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory