» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தியிடம் 4-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை!

திங்கள் 20, ஜூன் 2022 12:00:18 PM (IST)

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அமலாக்கத் துறை முன்பாக 4-வது நாளாக இன்று (திங்கள்கிழமை) ஆஜராகியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, ஏற்கெனவே ஜூன் 13 முதல் 15 வரை மூன்று நாள்கள் ஆஜராகினார்.  இதையடுத்து அடுத்தகட்ட விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (ஜூன் 17) ஆஜராக வேண்டுமென அமலாக்கத் துறையினா் அறிவுறுத்தினா். 

ஆனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தில்லியில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டியிருப்பதால், தனக்கு அவகாசம் அளிக்க வேண்டுமென ராகுல் காந்தி வேண்டுகோள் விடுதத்தன் அடிப்படையில் அவர் இன்று (திங்கள்கிழமை) ஆஜராகக் கூறினர். ஏற்கெனவே  3 நாள்களில் 30 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் இன்று 4-வது நாளாக ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory