» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அசாம் மாநிலத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு: 82பேர் உயிரிழப்பு - காட்டு விலங்குகளும் பாதிப்பு

செவ்வாய் 21, ஜூன் 2022 10:29:56 AM (IST)



அசாம் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தில் 82பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அசாம், மேகாலயா மாநிலங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. தொடர்மழை காரணமாக அணைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மழை வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் புதையுண்டும் அசாமில் இதுவரை 82 பேர் பலியாகி உள்ளனர். இதனை மாநில பேரிடர் மீட்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் பலியாகி உள்ளனர். தர்ராங், நாகோன், கச்சார், திப்ரூகர், ஹோஜாய், ஹைலகண்டி போன்ற பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.

மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 2.31 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அவை இழுத்து செல்லப்பட்டன. இதில் 8 விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறையினர் தெரிவித்து உள்ளனர். இதுபோல தேசிய விலங்குகள் பூங்காவிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள விலங்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அசாம் வெள்ள நிவாரண பணிகளை முடுக்கிவிட மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவை டெலிபோனில் அழைத்து நிலவரங்களை கேட்டறிந்தார். மேலும் அசாமில் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory