» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிப்பு

செவ்வாய் 21, ஜூன் 2022 5:15:45 PM (IST)

குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார். 

டெல்லியில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை முடிவு செய்ய எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்காவை குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் துணைத் தலைவராக இருந்த யஷ்வந்த் சின்கா, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஏதுவாக தனது ராஜினாமா கடிதத்தை திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பி இருந்தார். அதனை உறுதி செய்யும் வகையில் ட்வீட் ஒன்றும் அவர் செய்திருந்தார். அதில் எதிர்க்கட்சிகளின் நலனுக்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.

யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் நோக்கில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.  ஆளும் பாஜக தரப்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் வெகு விரைவில் உறுதி செய்யப்படுவார் எனத் தெரிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வரும் ஜூன் 29-ஆம் தேதி கடைசி தேதியாகும். தேவைப்படும் பட்சத்தில் ஜூலை 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory