» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் நவீன வங்கி முறைகளுக்கு மாற வேண்டும் : அமித் ஷா

வியாழன் 23, ஜூன் 2022 4:16:34 PM (IST)

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் நவீன வங்கி முறைகளை பின்பற்ற வேண்டும். இனி வரும் காலங்களில் நிலைத்திருக்க நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் சமச்சீர் வளர்ச்சியில் கவனம் வேண்டியது அவசியம்.. 1,534 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், 54 திட்டமிடப்பட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் உள்ளன. ஆனால் போதுமான வளர்ச்சி இல்லை. 

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். வங்கிகளில் கட்டமைப்பு மாற்றங்களும், கணக்கியல் செயல்முறைகளை கணினிமயமாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த துறையில் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்க வேண்டும். தற்போது, மொத்த வங்கித் துறையில் டெபாசிட் மற்றும் முன்பணம் செலுத்துவதில் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் பங்கு மிகக் குறைவாக உள்ளது" என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory