» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனுத் தாக்கல்!

வெள்ளி 24, ஜூன் 2022 12:48:53 PM (IST)



தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு(64) அறிவிக்கப்பட்டுள்ளார்.  குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக ஆதரவுக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. 

தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய நேற்று வியாழக்கிழமை தில்லி வந்தவர் பாஜகவின் முக்கியத் தலைவர்களையும் பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்தார்.  இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் முர்மு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.  எதிர்க்கட்சிகள் தரப்பில்  குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹ வருகிற ஜுன் 27 அன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory