» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜக மோசமான தோல்வியை தழுவும்: நிதிஷ்குமார்

திங்கள் 26, செப்டம்பர் 2022 11:26:36 AM (IST)



"அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் ஒன்றிணைந்தால், 2024 பொதுத் தேர்தலில் பாஜக தோல்வியை சந்திக்கும்” என்று ஹரியாணாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிதிஷ்குமார் குமார் பேசினார். 

மறைந்த முன்னாள் துணை பிரதமா் தேவிலால் பிறந்த நாளையொட்டி, இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) கட்சி சாா்பில் ஹரியாணாவில் ஃபதேஹாபாதில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஐஎன்எல்டி தலைவா் ஓம் பிரகாஷ் செளதாலா, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத்பவாா், ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், சிரோமணி அகாலி தளத்தின் சுக்பீா் சிங் பாதல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, சிவசேனையின் அரவிந்த் சாவந்த், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும் பிகாா் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா் ஒரே மேடையில் பங்கேற்றனா். 

ஆனால், இந்த பேரணியில் காங்கிரஸைச் சோ்ந்த யாரும் கலந்து கொள்ளவில்லை. எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிகார் முதல்வர் நிதீஷ் குமாா் பேசுகையில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பாஜகவை எதிர்கொள்ள அழைப்பு விடுத்தார், மேலும், அரசியல் ஆதாயத்திற்காக சமூகத்தில் "இந்து-முஸ்லிம் குழப்பங்களை" மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். 

"பாஜக அல்லாத கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால், நாட்டை அழிக்க பாடுபடுபவர்களை 2024 பொதுத் தேர்தலில் நாம் அகற்றலாம் என்று நிதிஷ்குமார் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். உண்மையிலேயே சமூகத்தில்  இந்து-முஸ்லீகளிடையே மோதல் இல்லை, சில தீங்கிழைக்கும் நபா்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

1947 இல் நடந்த பிரிவினைக்குப் பிறகு பெரும்பாலான முஸ்லிம்கள் இந்தியாவில் இருப்பதையே முடிவு செய்தனா். ஆனால், தங்களது அரசியல் ரீதியிலான ஆதாயங்களுக்காக, சமூகத்தில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே கலகத்தை விளைவிக்க முயற்சிப்பதாகவும், பொய்யான கூற்றுக்கள் மற்றும் வாக்குறுதிகளை அளிப்பதாக குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் இல்லாமல் ஒரு எதிர்க்கட்சிகள் கூட்டணியைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்ற நிதிஷ்குமார், மேலும் வலுவான காங்கிரஸ் எதிர்ப்பு வரலாற்றைக் கொண்ட சிலர் உள்பட மேடையில் உள்ள தலைவர்கள் ஒரு பெரியளவிலான ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

2024 மக்களவைத் தோ்தலில் இருமுனைப் போட்டி இருப்பதே பாஜகவின் தோல்வியை உறுதி செய்யும் என்றும், இந்த பிரதான எதிா்க்கட்சிகளின் கூட்டணியால் மட்டுமே உறுதி செய்ய முடியும். கடந்த மாதம் பாஜக உடனான உறவை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார், "மூன்றாவது அணி என்ற கேள்விக்கே இடமில்லை" என்றும், 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒரு "முக்கிய முன்னணி" இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், பிரதமர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை. பிகாரில் ஏழு கட்சிகள் ஒன்றாக உள்ளன, பாஜக தனித்து உள்ளது, தேர்தலில் பாஜக வெற்றிபெற முடியாது. காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்குப் பிறகு உறுதியான செயல்திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நிதிஷ்குமார் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory