» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி

திங்கள் 26, செப்டம்பர் 2022 4:36:39 PM (IST)லக்னோவில் 46 பக்தர்கள் பயணித்த டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயம் அடைந்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நவராத்திரியின் முதல் நாளில் வழிபாடு செய்வதற்காக, சந்திரிகா தேவி கோவிலுக்கு பயணிகள் சென்று கொண்டிருந்தனர். பக்ஷி கா தலாப் என்ற பகுதியில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்ததாகவும், மேலும் குளத்தில் மூழ்கியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது. விபத்தில் சிக்கிய பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory