» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காங்கிரசில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்தார்!
செவ்வாய் 27, செப்டம்பர் 2022 4:56:45 PM (IST)

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், திடீரென ஆகஸ்ட் 26ம் தேதி கட்சியில் இருந்து விலகினார். அவருக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உள்பட 20க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார்கள்.
இந்நிலையில் குலாம் நபி ஆசாத் நேற்று தனது புதிய கட்சியை தொடங்கினார். ‘ஜனநாயக ஆசாத் கட்சி’ என்று தனது கட்சிக்கு அவர் பெயர் வைத்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத், ‘‘எனது கட்சியின் பெயர், ஜனநாயகம், பேச்சு மற்றும் சிந்தனை சுதந்திரத்தை குறிக்கின்றது. மகாத்மா காந்தியின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டது எங்களது கட்சியின் கொள்கை. இது வேறு எந்த கட்சிக்கும் போட்டி கிடையாது. ஜம்முவில் அமைதி மற்றும் இயல்பு நிலையை வலுப்படுத்துவதில் எனது கட்சி கவனம் செலுத்தும்’’ என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி அறிவிப்பு
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:20:11 PM (IST)

நாடு முழுவதும் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வங்கி சேவைகள் பாதிப்பு!
செவ்வாய் 27, ஜனவரி 2026 10:51:57 AM (IST)

டெல்லியில் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார்..!
திங்கள் 26, ஜனவரி 2026 11:40:19 AM (IST)

தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு அங்கீகாரம்: மத்திய அரசின் பத்ம விருகள் அறிவிப்பு!
ஞாயிறு 25, ஜனவரி 2026 8:43:58 PM (IST)

மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள்: பிரதமர் மோடி தகவல்
ஞாயிறு 25, ஜனவரி 2026 8:13:44 PM (IST)

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள்: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 24, ஜனவரி 2026 5:43:32 PM (IST)


truthSep 28, 2022 - 08:42:11 AM | Posted IP 162.1*****