» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி கொலை... விபத்து நாடகமாடிய கணவர் கைது!
வெள்ளி 2, டிசம்பர் 2022 12:42:56 PM (IST)
மனைவியின் பெயரில் போட்ட இன்சுரன்ஸ் பணம் ரூ.1.90 கோடியை பெறுவதற்காக கூலிப்படை வைத்து மனைவியை கார் ஏற்றி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தான் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவர் 2015-ம் ஆண்டு ஷாலு தேவி என்பரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திருமணமான இரண்டு ஆண்டுகளுக்கு பின் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷாலு தனது மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் 2019-ம் ஆண்டு கணவர் மீது ஷாலு குடும்ப வன்முறை புகாரும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 5-ம் தேதி தனது சகோதரர் ராஜூவுடன் பைக்கில் அனுமன் கோயிலுக்கு சென்ற போது, பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் ஷாலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த ராஜு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை விபத்து வழக்காக கருதிய நிலையில், இதில் சந்தேகம் இருப்பதாக ஷாலுவின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனால் மகேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதே நேரம் ஷாலுவிடம் தான் ஒன்று நினைத்துள்ளதாகவும் இது நிறைவேறினால் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து விடுவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்காக 11 நாட்கள் தொடர்ந்து அனுமன் கோயிலுக்கு செல்லும் படியும் அவர் லூவிடம் சொன்னதாக கூறப்படுகிறது. இந்த விஷியத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார். அக்டோபர் 5-ஆம் தேதி வேண்டுதலுக்காக ஷாலு கோயிலுக்கு சென்றார்.
அப்போது. கூலிப்படையை சேர்ந்த முக்கேஷ் சிங் ரத்தோர், ராகேஷ் குமார், சோனு சிங் ஆகியோரிடம் ரு.10 லட்சம் தருவதாக கூறியுள்ளார். முதற்கட்டமாக ரூ.5.5 லட்சம் வழங்கி விபத்தை ஏற்படுத்த மகேஷ் முடிவெடுத்திருந்தார் . அன்று, ஷாலு வீட்டை விட்டு வெளியே வந்ததும் கூலிப்படைக்கு தகவல் தெரிவித்தார் மகேஷ். அப்போது அவர் நடந்து செல்லும் போது பின்னால் காரை ஏற்றி கூலிப்படையினர் கொலை செய்ததாக மகேஷ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். கூலிப்படையை சேர்ந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)

பாராசிட்டமால் 650 உள்பட 14 வகை மாத்திரை, மருந்துகளுக்கு கர்நாடக அரசு தடை!
வியாழன் 26, ஜூன் 2025 3:32:39 PM (IST)

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் : பிரதமர் மோடி வாழ்த்து
புதன் 25, ஜூன் 2025 5:17:32 PM (IST)
