» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மரியாதை!

சனி 3, டிசம்பர் 2022 11:15:11 AM (IST)இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 138வது பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி மரியாதை செலுத்தினார். 

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 138வது பிறந்தநாளை முன்னிட்டு ராஷ்டிரபதி பவனில் அவரது திருவுருவ படத்திற்கு   குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: டாக்டர் ராஜேந்திர பிரசாத்ஜியை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் ஒரு பழம்பெரும் தலைவர், அவர் தைரியத்தையும் அறிவார்ந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். அவர் இந்தியாவின் கலாச்சாரத்தில் உறுதியாக வேரூன்றியவர் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான எதிர்கால பார்வையையும் கொண்டிருந்தார்" என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory