» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு கேரளா உயர்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீன் ரத்து!
சனி 3, டிசம்பர் 2022 5:01:53 PM (IST)
விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு போட்ட கேரளா அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரளா உயர்நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் உளவு பார்த்ததாக கேரள விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994ம் ஆண்டு கைது செய்யப்பட்டு எந்தஆதாரமும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நம்பி நாராயணனுக்கு ரூ.50லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.இந்த நிலையில் இஸ்ரோ வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட குற்றவாளிகளான கேரள முன்னாள் டிஜிபி சிபி மேத்யூஸ், பி.எஸ்.ஜெயபிரகாஷ், தம்பி எஸ்.துர்கா தத், விஜயன் மற்றும் ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து அதனை விசாரித்த நீதிமன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக மேற்கண்ட அனைவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து மேற்கண்ட கேரளா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபி.ஐ தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் சிபி.ஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கிறது. இதில் விஞ்ஞானி நம்பி நாராயண மீது பொய் புகார் இணைக்க சதி செய்த குற்றச்சாட்டில் நான்கு அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம்.மேலும் இந்த வழக்கை விரிவாக விசாரிக்க மீண்டும் கேரளா உயர்நீதிமன்றத்திற்கு திருப்பி வைக்கிறோம். அவர்கள் நான்கு வாரத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 65 தொகுதிகள்! அமித் ஷாவிடம் பட்டியல் வழங்கிய நயினார்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:02:00 PM (IST)

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)


