» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அதானி குழும விவகாரத்தால் எதிர்க்கட்சிகள் அமளி - நாடாளுமன்றம் முடங்கியது!

வியாழன் 2, பிப்ரவரி 2023 12:39:18 PM (IST)

அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, இந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் இன்று அளித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை இரு அவைகளும் கூடியவுடன் அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இரு அவைகளின் தலைவர்களும் ஏற்க மறுத்ததை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டதால், பகல் 2 மணிவரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory