» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்- காங். வலியுறுத்தல்

திங்கள் 6, பிப்ரவரி 2023 4:41:58 PM (IST)

அதானி குழும நிறுவனத்தின் புகார் பற்றி பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார். 

அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.

போராட்டத்திற்கு பிறகே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அதானி குழும விவகாரம் குறித்து பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும். ஜனாதிபதி உரை மீதான விவாதத்தை காட்டிலும் பிரதமர் முதலில் பதில் அளிக்க வேண்டும்.

அதானி குழும நிறுவனத்தின் புகார் பற்றி மத்திய அரசு விவாதிக்க மறுப்பதோடு அதை அவை பதிவுக்கு கொண்டு வரக் கூடாது என நினைக்கிறது. ஜனாதிபதி உரை மீதான விவாதங்களுக்கு தயாராக இருக்கிறோம். அதற்கான முக்கியத்துவததையும் தருகிறோம். என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory