» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத ஓராண்டு விலக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 11:46:29 AM (IST)

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை எழுத மொழிவாரி சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு 2006-ம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டுவந்ததன் வாயிலாக, அனைத்து பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிறமொழி பள்ளி மாணவர்களும் பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை கட்டாயம் எழுத வேண்டியுள்ளது.

இதற்கு எதிராக விலக்கு கோரி தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு தவிர்த்து ஏனைய மாநிலங்களில் மும்மொழி கொள்கை அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும்தான் இருமொழி கொள்கை அமலில் இருக்கிறது. இதனால் மொழிவாரி சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சங்கத்தின் சார்பில் வாதிடப்பட்டது.

2022-23 கல்வியாண்டில், மனுதாரர் பிரதிநிதித்துவப்படுத்தும் 863 மாணவர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடியும் என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்றம், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுத மொழிவாரி சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)


Sponsored Ads





Tirunelveli Business Directory