» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம்: டி.கே.சிவக்குமார் வது உறுதி!!
புதன் 31, மே 2023 10:48:39 AM (IST)
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார், நீர்ப்பாசனத் துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, மேகதாது அணை மற்றும் மகதாயி நதி நீர் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் டி.கே.சிவக்குமார்;- காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். கர்நாடக மாநிலத்தின் நீண்ட நாள் நிலுவையில் உள்ள முக்கிய திட்டமான மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை அமல்படுத்த தான் விரைவில் டெல்லி சென்று உரிய மத்திய அமைச்சர்களை சந்தித்து அனுமதி பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. மேகதாது எங்களது உரிமை. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் இல்லை எனவும் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். டி.கே.சிவக்குமார்மேகதாது கட்டுவது உறுதி என கூறியுள்ளது தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி டி.கே. சிவக்குமார் யாத்திரை நடத்தியதியது குறிப்பிடத்தக்கது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் வலுவான பதிலடி கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி
ஞாயிறு 11, மே 2025 9:29:29 PM (IST)

குடியரசுத் தலைவர் முர்முவின் சபரிமலை பயணம் ரத்து: பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி!!
சனி 10, மே 2025 4:56:04 PM (IST)

காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்!
சனி 10, மே 2025 3:47:49 PM (IST)

எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகள் முறியடிப்பு: இந்திய ராணுவம் அதிரடி
சனி 10, மே 2025 11:18:54 AM (IST)

முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை!
சனி 10, மே 2025 8:47:45 AM (IST)

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிப்பு : உமர் அப்துல்லா
வெள்ளி 9, மே 2025 5:52:30 PM (IST)
