» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வெடிகுண்டு வைத்திருப்பதாக பெண் பயணி மிரட்டல்: மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு!
வியாழன் 1, ஜூன் 2023 4:09:33 PM (IST)
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவுக்குச் செல்லும் பெண் பயணி ஒருவர் தான் கொண்டுவந்த பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து கூடுதல் கட்டணம் செலுத்த அந்தப் பெண் பயணி மறுத்துள்ளார். பின்னர், தான் கொண்டுவந்த பையில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர் கொண்டுவந்த பைகளை சோதனை செய்தனர். ஆனால், அதில் சந்தேகத்திற்குரிய எந்தவித பொருளும் காணப்படவில்லை.பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதற்காக பெண் பயணி வெடிகுண்டு வைத்திருப்பதாக அங்குள்ளவர்களை பீதியடைய செய்துள்ளார். இதையடுத்து, இந்த சம்பவத்திற்குப் பிறகு சஹார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பெண் பயணி கைது செய்யப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் வலுவான பதிலடி கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி
ஞாயிறு 11, மே 2025 9:29:29 PM (IST)

குடியரசுத் தலைவர் முர்முவின் சபரிமலை பயணம் ரத்து: பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி!!
சனி 10, மே 2025 4:56:04 PM (IST)

காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்!
சனி 10, மே 2025 3:47:49 PM (IST)

எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகள் முறியடிப்பு: இந்திய ராணுவம் அதிரடி
சனி 10, மே 2025 11:18:54 AM (IST)

முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை!
சனி 10, மே 2025 8:47:45 AM (IST)

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிப்பு : உமர் அப்துல்லா
வெள்ளி 9, மே 2025 5:52:30 PM (IST)
