» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஒடிசா ரயில் விபத்து எதிரொலி: 43 ரயில்கள் ரத்து; 36 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
சனி 3, ஜூன் 2023 10:18:54 AM (IST)

ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக 43 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது; 36 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம்புரண்டது. அதில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் மீட்புப் பணிகளுக்கு உதவி வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக 43 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது; 36 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் வலுவான பதிலடி கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி
ஞாயிறு 11, மே 2025 9:29:29 PM (IST)

குடியரசுத் தலைவர் முர்முவின் சபரிமலை பயணம் ரத்து: பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி!!
சனி 10, மே 2025 4:56:04 PM (IST)

காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்!
சனி 10, மே 2025 3:47:49 PM (IST)

எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகள் முறியடிப்பு: இந்திய ராணுவம் அதிரடி
சனி 10, மே 2025 11:18:54 AM (IST)

முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை!
சனி 10, மே 2025 8:47:45 AM (IST)

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிப்பு : உமர் அப்துல்லா
வெள்ளி 9, மே 2025 5:52:30 PM (IST)
