» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: முதற்கட்ட அறிக்கை; இந்திய ரயில்வே துறை விளக்கம்

ஞாயிறு 4, ஜூன் 2023 4:20:43 PM (IST)



கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது எப்படி?.. என்ற விளக்கத்தை இந்திய ரயில்வே துறை அளித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் செயல்பாடு மற்றும் வணிக மேம்பாட்டு உறுப்பினர் ஜெயா வர்மா கூறும்போது, "விபத்து ஏற்பட்ட பஹனகா பகுதியில் 4 ரயில் வழித் தடங்கள் உள்ளன. இதில் இரண்டு பிரதானமான ரயில் வழித்தடங்கள். மற்ற இரண்டும் லூப் தடங்கள். ரயிலை நிறுத்த வேண்டும் என்றால், லூப் தடத்தில்தான் நிறுத்துவோம். விபத்தின் போது, ​​இரண்டு விரைவு ரயில்களும் ரயில் நிலையத்தின் வழியாக வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருந்தன. ரயில் நிலையங்களைப் பொறுத்தவரை , லூப் லைன்கள் முக்கிய வழித்தடங்கள் நடுவிலும், முக்கிய வழித்தடங்களின் இருபுறமும் இருக்கும்.

விபத்தின்போது, ​​நிற்க வேண்டிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வழிவிட இரண்டு ரயில்கள் நிறுத்தப்பட்டன. அப்போது லூப் லைனில் சரக்கு ரயில் காத்திருந்தது. கோரமண்டல் மற்றும் பெங்களூரு - ஹவுரா விரைவு ரயிலுக்கான இரண்டு முக்கிய பாதைகள் அகற்றப்பட்டு, எல்லாம் தயாராக இருந்தது, சிக்னலும் பச்சை அளிக்கப்பட்டது.பச்சை சமிக்ஞை என்பது ஓட்டுநருக்கு முன்னோக்கிச் செல்லும் பாதை தெளிவாக உள்ளது அவர் அதிகபட்ச வேகத்தைப் பயன்படுத்தலாம் என்பதையே குறிக்கும்.

அந்த இடத்தில் கோரமண்டலுக்கான அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 130 கி.மீ. அங்கு கோரமண்டல் ரயில் மணிக்கு 128 கிமீ வேகத்தில் சென்றிருக்கிறது. அதே நேரத்தில் பெங்களூரு - ஹவுரா அனுமதிக்கப்பட்ட வேக வரம்பிற்குள் மணிக்கு 126 கிமீ வேகத்தில் சென்றிருக்கிறது. ரயில்கள் அதிவேகத்தில் செல்லவில்லை. சிக்னல் பச்சை நிறத்தில் இருந்ததாலேயே ரயில்கள் சென்றுள்ளன. முதற்கட்ட அறிக்கையில் சில சிக்னல் கோளாறுகளால் விபத்து ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை நான் அதைப் பற்றி கருத்து தெரிவிக்க மாட்டேன். 

ஆனால் மூன்று ரயில்கள் மோதியதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை . இதில் கோரமண்டல் ரயில் மட்டுமே விபத்தை எதிர் கொண்டது, கோரமண்டல் ரயில்தான் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. ரயில் அதன் அதிகபட்ச வேகத்தில் இருந்ததால் இதன் தாக்கம் மிகப்பெரியதாக மாறியுள்ளது. சரக்கு ரயில் கனமானது மற்றும் இரும்பு தாது கொண்டது. இதனால் சரக்கு ரயிலுக்கு ஒன்றும் ஆகவில்லை. இந்த மோதலின் முழு பாதிப்பு கோரமண்டல் ரயிலுக்குத்தான் ஏற்பட்டது. 

கோரமண்டலின் பெட்டிகள் எல்ஹெச்பியால் ( Linke Hofmann Busch coach- ரயில் பெட்டிகளை தயாரிக்கும் ஜெர்மன் நிறுவனம்) ஆனவை. இவை மிகவும் பாதுகாப்பானவை. ஒன்றோடு ஒன்று மோதி விழாது. ஆனால் இந்த விபத்தில் முழு பாதிப்பும் கோரமண்டல் ரயில் பக்கம் வந்ததால், எந்த தொழில்நுட்பத்தினாலும் அதனைக் காப்பாற்ற முடியவில்லை. கோரமண்டல் ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள், யஷ்வந்த்பூர் ஹவுரா கடந்து செல்லும் மற்ற முக்கிய பாதையில் விழுந்ததால் யஷ்வந்த்பூர் ரயிலின் கடைசி சில பெட்டிகளும் பாதிப்படைந்தன.” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory