» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

வியாழன் 28, செப்டம்பர் 2023 3:14:08 PM (IST)



வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்(98) வயதுமூப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலை 11.20 மணிக்கு காலமானார். 

அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன்ஜி மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. நம் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில், விவசாயத்தில் அவர் செய்த திருப்புமுனையான பணி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது, நம் நாட்டிற்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது.

விவசாயத்தில் ஆற்றிய புரட்சிகரப் பங்களிப்புகளுக்கு அப்பால், அவர் புதுமையின் எடுத்துக்காட்டாகவும், பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதலுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, எண்ணற்ற விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் மீது அழியாத முத்திரையைப் பதித்துள்ளது. 

டாக்டர் சுவாமிநாதனுடனான என் உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். இந்தியா முன்னேற்றம் காண வேண்டும் என்ற அவரது ஆர்வம் முன்னுதாரணமானது. அவரது வாழ்க்கையும் பணியும் வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி' என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory