» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு : கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்
வெள்ளி 29, செப்டம்பர் 2023 3:55:37 PM (IST)
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு கன்னட திரையுலகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
கர்நாடக திரைப்பட வர்த்தக கூட்டமைப்பு அலுவலகம் அருகே கன்னட திரைப் பிரபலங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மைசூருவில் பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உடுப்பு, தக்சின் கன்னடா பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. தமிழகத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் கன்னட அமைப்பினர், விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.
எல்லையில் போக்குவரத்து முடக்கம்: முழு அடைப்பு காரணமாக் தமிழக - கர்நாடகா இடையேயான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்குச் செல்லும் வாகனங்கள் ஜூஜூவாடி, பண்ணாரி, குரங்கணி எனப் பல பகுதிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
இது ஒருபுறம் இருக்க, கர்நாடகாவில் இறந்துபோன நபரின் ஈமச்சடங்கில் பங்கேற்க முடியாமல், காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் தவித்த உறவினர்களை கர்நாடகாவுக்குள் செல்ல அனுமதியளித்தனர். புளிஞ்சூர் சோதனைச் சாவடி வரை தாளவாடி போலீஸார் அவர்களுடன் சென்று வழி அனுப்பிவைத்தனர்.
பெங்களூருவில் கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் நடத்துகின்றனர். இதுவரை போராட்டங்கள் அமைதியான முறையிலேயே நடைபெற்று வருகின்றன. ஃப்ரீடம் பார்க் பகுதியில் மட்டுமே போராட்டங்கள் அனுமதிக்கப்படுவதால் அத்தனை போராட்டக்காரர்களும் அங்கேயே குவிகின்றனர். அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அங்கு வந்து போராடுபவர்கள் சில நிமிடங்களில் அப்புறப்படுத்தப்பட்டு பத்திரமாக வாகனங்களில் ஏற்றி குறிப்பிட்ட சில இடங்களில் காவலில் வைக்கப்படுகின்றனர். அனைவரும் மாலை 6 மணிக்கு மேல் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. ஃப்ரீடம் பார்க் தவிர்த்து டவுன் ஹால், சேட்டிலைட் பஸ் நிலையம் காந்திநகரில் திறட்ட போராட்டக்காரர்கள் தடுத்து காவலில் எடுக்கப்பட்டனர். அதன்படி கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பில் ப்ரவீன் ஷெட்டி, ஆர்டி நகரில் போராட முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு: பாதுகாப்பு துறை அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 4:34:49 PM (IST)

அபுதாபி லாட்டரியில் ரூ.57 கோடி பரிசு: கோடீஸ்வரர் ஆன கேரள தொழிலாளி!
வியாழன் 8, மே 2025 12:16:16 PM (IST)

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய் செய்தி வெளியிட்ட சீன அரசு ஊடகத்திற்கு இந்தியா கண்டனம்!
வியாழன் 8, மே 2025 11:12:21 AM (IST)

பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி: உமர் அப்துல்லா பேட்டி
புதன் 7, மே 2025 3:41:28 PM (IST)

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியீடு
புதன் 7, மே 2025 12:54:12 PM (IST)

பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு விளக்கம்
புதன் 7, மே 2025 12:03:23 PM (IST)
