» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 12:50:32 PM (IST)



மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை திருப்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

ஒரு நபர் தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நோ்ந்தால், தனது குடும்பத்தினா் பொருளாதார ரீதியாக கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவே ஆயுள் காப்பீடு எடுப்பதாகவும், அதற்கு செலுத்தும் பிரீமியம் தொகையில் 18 சதவீதம் அரசுக்கு வரியாக செலுத்தினால் இது குடும்பங்களின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்றும், எனவே ஆயுள் காப்பீடு மீதான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை திருப்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது.

அதேபோல், ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரிமீயம் தொகை மீது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டியை (சரக்கு-சேவை வரி) ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி முன்னதாக கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory