» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வயநாட்டில் 6 மாதங்களுக்கு மின் கட்டணம் கிடையாது - கேரள அரசு உத்தரவு!

புதன் 7, ஆகஸ்ட் 2024 3:35:35 PM (IST)

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 மாதங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலைக்கிராமங்கள் சின்னாபின்னமாகி விட்டது. நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, புஞ்சிரிமட்டம் ஆகிய பகுதிகள் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு மண் மூடியும், உருக்குலைந்தும் காணப்படுகிறது.

நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் தங்களது வீடுகளில் எஞ்சி இருக்கும் உடைமைகள் மற்றும் ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். அங்குள்ள வீடுகளில் திருட்டு நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மீட்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து 9-வது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர்களிடம் 6 மாதங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று கேரள மாநில மின் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக 10 குழுவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

தமிழன்Aug 9, 2024 - 01:04:18 PM | Posted IP 162.1*****

அங்கு வீடே இல்லை பிறகு எப்படி மின் கட்டணம் வசூலிப்பது?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory