» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற பஞ்சாப் முதல்வர்!

வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 12:54:31 PM (IST)

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வரவேற்பு அளித்துள்ளார்.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வரான சிசோடியா கடந்த பிப்ரவரி 26, 2003 அன்று சிபிஐ கைது செய்தது. இதையடுத்து மார்ச் 9, 2023ல் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை அவரை கைது செய்தது. இந்நிலையில் ரூ.10 லட்சம் செலுத்துவதோடு, தனது கடவுச்சீட்டை ஒப்படைக்க நிபந்தனை விதித்து உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.

மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழங்குகளிலும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாமீன் வழங்கியிருக்கிறது. மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு ஒன்றைரை ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மணீஷ் சிசோடியாவின் எக்ஸ் பதிவில், உண்மைக்குக் கிடைத்த வெற்றி என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பாராட்டுவதாகவும், வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory