» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை: ஒடிசா துணை முதல்வர் அறிவிப்பு

வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 10:52:15 AM (IST)

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை விடப்படும் என்று ஒடிசாவின் துணை முதல்வர் பிரவதி பரிதா அறிவித்தார். 

ஒடிசா மாநில துணை முதல்வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான பிரவதி பரிதா நேற்று கட்டாக் நகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். 

பின்னர் அவர் கூறுகையில், "ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை வழங்கப்படும். மாதவிடாய் சுற்றின் முதல் அல்லது இரண்டாவது நாளில் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். என்றாலும் இந்த விடுமுறையை எடுத்துக்கொள்வது பெண்களின் விருப்பத்தை பொறுத்தது” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory