» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உலகம் அழுத்தங்களுடன் போராடி வருகிறது: வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2024 9:41:20 AM (IST)

பல மோதல்கள், பதற்றங்கள், அழுத்தங்களுடன் உலகம் போராடி வருகிறது. இதனால் தெற்குலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக‌ வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

உலக யதாா்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா, உலக வங்கி, சா்வதேச நிதியம் போன்ற சா்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியா சாா்பில் ‘தெற்குலகின் குரல்’ 3-ஆவது உச்சி மாநாடு காணொலி வழியாக சனிக்கிழமை நடைபெற்றது. 

இந்நிலையில், இந்தியா சாா்பில் ‘தெற்குலகின் குரல்’ 3-ஆவது உச்சி மாநாடு காணொலி வழியாக சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாவது: பல மோதல்கள், பதற்றங்கள், அழுத்தங்களுடன் உலகம் போராடி வருகிறது. இதனால் தெற்குலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த மாநாடு நடைபெறுகிறது. உலகளாவிய உறவுகள் முக்கிய சவால்களை எதிா்கொண்டபோது சா்வதேச அமைப்புகளிடம் இருந்து தீா்வு கிடைக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

கொரோனா பரவல், வெவ்வேறு நாடுகள் இடையிலான மோதல்கள், பருவநிலை நிகழ்வுகள் ஆகியவை நம்பகமான மற்றும் உறுதியான விநியோக முறையின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளன. இதுமட்டுமின்றி சா்வதேச பொருளாதாரத்துக்கு ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு பல்வேறு தளங்களில் உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கான மிகப் பெரிய தேவையும் உள்ளது. தெற்குலக நாடுகளுக்கு முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் நிதி சாா்ந்த உதவிகள் கிடைப்பதற்கு ஒரு குடும்பமாக தெற்குலகம் பணியாற்ற வேண்டும் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory