» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி!

திங்கள் 19, ஆகஸ்ட் 2024 5:05:36 PM (IST)



டெல்லியில், பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி, 'எனது இளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடியதில் மகிழ்ச்சி' என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப் பழமையான பண்டிகைகளில் ரக்ஷா பந்தன் ஒன்று ஆகும். சகோதர, சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி, சகோதரத்துவத்தைக் வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று (ஆக.,19) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி, தனது 'எக்ஸ்' பக்கத்தில், 'சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள அபரிமிதமான அன்பின் அடையாளமான ரக்ஷா பந்தன் நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த புனிதமான நாளில், உங்கள் அனைவரின் உறவுகளில் புதிய இனிமையையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும்' எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் இன்று பள்ளி குழந்தைகளுடன் பிரதமர் மோடி ரக்ஷா பந்தன் கொண்டாடினார். குழந்தைகள், பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். மோடியும், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பேசி மகிழ்ந்தார். இதன் புகைப்படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி, 'எனது இளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடியதில் மகிழ்ச்சி' எனப் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory