» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியை நிலை நாட்டுவோம் : ராகுல்காந்தி உறுதி!

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2024 5:42:00 PM (IST)

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியை நிலை நாட்டுவோம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பணியிடங்களில் நேரடி நியமன நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை ரத்து செய்யும்படி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு மத்திய மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கடிதம் எழுதி உள்ளார். சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம் என பிரதமர் கூறியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நேரடி நியமனம் தொடர்பான யு.பி.எஸ்.சி. அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "என்ன விலை கொடுத்தேனும் இடஒதுக்கீட்டையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்போம். உயர் பதவிகளில் நேரடி நியமனம் போன்ற பா.ஜனதாவின் அனைத்து சதிகளையும் முறியடிப்போம்.

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். 50 சதவீத இடஒதுக்கீடு செய்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியை நிலை நாட்டுவோம். ஜெய் ஹிந்த்.." என்று அதில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

கந்தசாமிSep 25, 2024 - 11:12:59 AM | Posted IP 162.1*****

ஜாதி இல்லா இந்தியர்

அப்போAug 21, 2024 - 10:05:16 AM | Posted IP 172.7*****

அந்த இத்தாலிய பப்பு என்ன ஜாதி? தாத்தா ஈரானிய வம்சவினர், தயார் கிறிஸ்தவர், இவரு பிராமின் ஜாதியாம். பல மத வேஷம், பல ஜாதி வேஷம் போடுவார் அந்த வேலை வெட்டி இல்லாத ஊர் சுற்றும் பப்பு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory