» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உலகளவில் சிறந்த ரிசர்வ் வங்கியாளராக சக்தி காந்த தாஸ் மீண்டும் தேர்வு!

புதன் 21, ஆகஸ்ட் 2024 12:50:17 PM (IST)

உலகளவில் சிறந்த ரிசர்வ் வங்கி ஆளுநருக்கான தரவரிசையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் ‛ஏ பிளஸ் 'ரேங்கிங் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு 1987 ல் துவங்கப்பட்ட ‛குளாபல் பைனான்ஸ் ' என்ற இதழ், 1994 ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்படும் ரிசர்வ் வங்கி ஆளுநர்களை அங்கீகரித்து வருகிறது. உலகின் 100 முக்கிய நாடுகுளின் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள், ஐரோப்பிய யூனியன், கிழக்கு கரீபியன் ரிசர்வ் வங்கி, மத்திய ஆப்ரிக்க ரிசர்வ் வங்கி, மேற்கு ஆப்ரிக்க மாநிலங்களின் ரிசர்வ் வங்கி மற்றும் ஆசிய வங்கிகள் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை கணித்து வருகிறது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், ரூபாய் நோட்டு ஸ்திரத்தன்மை மற்றும் வட்டி விகித நிர்வாகம் ஆகியவற்றை சிறப்பாக கையாண்ட ரிசர்வ் வங்கி ஆளுநர்களை கிரேடிங் முறையில் ‛ ஏ பிளஸ் ' முதல் ‛ எப் ' வரை தரவரிசைபடுத்துகிறது. ‛ ஏ' என்றால் சிறப்பாக செயல்படுதல் ‛ எப்' என்றால் தங்களது செயல்பாடுகளில் தோல்வியுற்ற வங்கித் தலைவர்களின் பெயர் இடம்பெற்று இருக்கும். 2023ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் ‛ ஏ பிளஸ் ' ரேங்கிங் பெற்று இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory