» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கடந்த ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் 65 லட்சம் மாணவர்கள் தோல்வி

வியாழன் 22, ஆகஸ்ட் 2024 11:17:17 AM (IST)

கடந்த ஆண்டில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் 65 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் 56 மாநில கல்வி வாரியங்கள் மற்றும் 3 தேசிய கல்வி வாரியங்கள் உட்பட 59 பள்ளி கல்வி வாரியங்கள் மூலம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்ததில், பிளஸ்-2 தேர்வை அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவிகள் எழுதியுள்ளனர், 

ஆனால் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறைந்த அளவிலான மாணவிகளே தேர்வு எழுதியுள்ளனர். 10-ம் வகுப்பு படித்த சுமார் 33.5 லட்சம் மாணவர்கள், 11-ம் வகுப்புக்கு செல்லவில்லை. காரணம் 5.5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை, 28 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதேபோல், சுமார் 32.4 லட்சம் மாணவர்கள், 12-ம் வகுப்பை தாண்டவில்லை. இவர்களில் 5.2 லட்சம் பேர் தேர்வே எழுதவில்லை. 27.2 லட்சம் பேர் தோல்வியடைந்துள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மத்திய கல்வி வாரியத்தில் மாணவர்கள் தோல்வி 6 சதவீதம். மாநில வாரியங்களின் தோல்வி 16 சதவீதம். பிளஸ்-2 தேர்வில், மத்திய வாரியத்தில் தேர்ச்சி பெறாதோர் 12 சதவீதமாகவும், மாநில வாரியங்களின் தேர்ச்சி பெறாதவர்கள் 18 சதவீதமாகவும் உள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் திறந்தநிலைப் பள்ளிகளின் செயல்திறன் மோசமாக உள்ளது.

மத்தியபிரதேச மாநில வாரியத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் தோல்வி அடைந்துள்ளனர். பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் தோல்வி அடைந்துள்ளனர். 2022-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டில் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெறுவதில் மாணவிகளே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory