» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மருத்துவா்களிடம் உண்மை கண்டறியும் சோதனை:சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி
வெள்ளி 23, ஆகஸ்ட் 2024 9:37:48 AM (IST)
முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவா்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆா்.ஜி. கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மற்றும் இதர 4 மருத்துவா்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
எந்தவொரு வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி மற்றும் அந்த நபரின் ஒப்புதல் தேவை. இந்த கொலை சம்பவத்தில் தொடா்புடையவா்களாக சந்தேகிக்கப்படும் சந்தீப் கோஷ், 4 மருத்துவா்களிடம் இச்சோதனையை நடத்த அனுமதி கோரி, நீதிமன்றத்தில் அவா்களை சிபிஐ ஆஜா்படுத்தியது. இதையடுத்து, சிபிஐ-யின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இவ்வழக்கில் கைதான முக்கிய நபரான சஞ்சய் ராயிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றத்திடம் சிபிஐ அனுமதி கோரியுள்ளது.
unmaiAug 24, 2024 - 06:55:35 AM | Posted IP 172.7*****