» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

சனி 24, ஆகஸ்ட் 2024 4:35:48 PM (IST)

போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்து தனி விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.

ஐரோப்பிய நாடான உக்ரைனுடன் கடந்த 1992-ம் ஆண்டு முதல் இந்தியா தூதரக உறவுகளை பேணி வருகிறது. அந்த நாடு மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. 2½ ஆண்டுகளை கடந்து நீடித்து வரும் இந்த போர் குறித்து இந்தியா கவலையை வெளியிட்டு வருகிறது.

இரு நாடுகளும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் மோதலுக்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களிடமும் அவர் நேரிலும் வலியுறுத்தி இருந்தார்.இந்த நிலையில் இத்தாலியில் கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடியை சந்தித்த ஜெலன்ஸ்கி, அவரை உக்ரைன் வருமாறு அழைப்பு விடுத்தார். இதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

அதன்படி போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இதற்காக கடந்த 22-ந் தேதி புறப்பட்டு போலந்து சென்ற அவர், அங்கே 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதையடுத்து, ரயில் மூலமாக உக்ரைனுக்கு சென்றார். அங்கு உக்ரைன் அதிபரை சந்தித்து பேசினார். 

உக்ரைன் அதிபருடனான சந்திப்பின் போது, பிராந்தியத்தில் அமைதி திரும்ப இந்தியா உதவும் என உறுதி அளித்தார். இந்த நிலையில், போலந்து, உக்ரைன் பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார். தனி விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory