» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை சரிந்து விழுந்ததால் பரபரப்பு

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 8:13:44 AM (IST)



மராட்டியத்தில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை சரிந்து விழுந்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டிய மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம் மால்வனில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் 35 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி மன்னரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டது. கடற்படை தினத்தையொட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சத்ரபதி சிவாஜி கடற்படையை திறம்பட நிர்வகித்தவர். எனவே கடற்படை தினத்தில் அவரது நினைவை போற்றும் வகையில், இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை மிகவும் கம்பீர தோற்றத்துடன் காட்சி அளித்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிந்துதுர்க்கில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. நேற்று மதியம் 1 மணியளவில் ராஜ்கோட் கோட்டையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை திடீரென பீடத்தில் இருந்து அடியோடு சரிந்து விழுந்து துண்டு, துண்டாக சிதறியது. சிலை விழுந்ததில் அதன் சுற்றுச்சுவரும் சேதமடைந்தது.

தகவல் அறிந்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சிலை விழுந்ததற்கான காரணம் குறித்து நிபுணர்கள் விசாரித்து வருகின்றனர். பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை சரிந்து விழுந்த சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் பா.ஜனதா மற்றும் ஆளும் கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory