» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்

புதன் 28, ஆகஸ்ட் 2024 5:51:45 PM (IST)

பெண்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்பு நிலை சமூகங்களுக்கு கண்ணியம் அளிப்பதிலும் ஜன்தன் யோஜனா திட்டம் முதன்மையானது என்று பிரதமர் மோடி கூறினார்.

ஏழைகள் அனைவரும் வங்கிக்கணக்கு தொடங்க கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜன்தன் யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்தத் திட்டத்தின் மூலம் மினிமம் பேலன்ஸ் இன்றி வங்கிக் கணக்கைப் பராமரிக்க முடியும். இதன்மூலம் கோடிக்கணக்கான இந்தியர்கள் முறையான நிதி அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டனர்.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை 53 கோடிக்கும் அதிகமானோர் இத்திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளனர். இதில் 30 கோடி பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் கணக்கு தொடங்கியவர்களில் 66.6 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். 55.6 சதவீதம் பேர் பெண்கள்.

இந்நிலையில், ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டதன் 10-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டதன் 10-ம் ஆண்டு என்பது ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது. அனைத்துப் பயனாளிகளுக்கும் வாழ்த்துகள். இத்திட்டம் வெற்றியடைய உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நிதி உள்ளடக்கத்தை அதிகரிப்பதிலும், கோடிக்கணக்கான மக்களுக்கு. குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்பு நிலை சமூகங்களுக்கு கண்ணியம் அளிப்பதிலும் ஜன்தன் யோஜனா திட்டம் முதன்மையானது என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory