» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வயநாட்டில் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

ஞாயிறு 1, செப்டம்பர் 2024 7:53:27 PM (IST)

வயநாட்டில் சுற்றுலாத் துறையை மீட்டெடுத்து மக்கள் வருகையை ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் சில கேரள காங்கிரஸ் தலைவர்களுடன் காணொளி வாயிலாக சந்திப்பு நடத்தினார். அந்தச் சந்திப்பில் வயநாட்டில் நடைபெறும் நிவாரணப் பணிகள் குறித்தும், சுற்றுலாத் துறையை மீட்பது குறித்தும் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மோசமான நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து வயநாடு படிப்படியாக மீண்டு வருகிறது. அங்கு, இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியிருக்கும் நிலையில், நிவாரணப் பணிகளில் அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து இருப்பதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த நிலையில் வயநாடு மக்களுக்கும் பெரிதும் உதவுக்கூடிய முக்கிய அம்சமான சுற்றுலாவை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். மழை ஓய்ந்தவுடன் வயநாட்டில் சுற்றுலாத் துறையை மீட்டெடுத்து, மக்கள் வருகையை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”நிலச்சரிவு ஏற்பட்டது வயநாட்டில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே. முழு ஊரிலும் அல்ல. பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் கொண்ட சுற்றுலா தளமான வயநாடு விரைவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க இருக்கும் பயணிகளை ஈர்க்கத் தயாராகும்.

அழகான வயநாட்டில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு கடந்த காலத்தைப் போலவே மீண்டும் ஆதரவை வழங்கவேண்டும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory