» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தினால் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி செல்லலாம்: கட்கரி அறிவிப்பு
வியாழன் 6, பிப்ரவரி 2025 11:30:18 AM (IST)
இனி ஆண்டுக்கு ரூ. 3000-ஐ சுங்கக் கட்டணமாக செலுத்திவிட்டு, நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

வாழ்நாள் கட்டணமாக 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 கட்டினால், அதன் பின்னர் அந்த காலகட்டத்திற்கு சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்த திட்டம் அமலானால் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் நேரடியாக பயன்பெறுவர். அத்துடன் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதும் தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ரூ.340 கட்டணம் செலுத்தினால் மாதம் முழுக்கவும், ரூ.4,080 கட்டணம் செலுத்தினால் ஆண்டு முழுக்கவும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் செல்லலாம் என்ற திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு இந்த புதிய திட்டம் மூலம் மாதம் ரூ.1,080 மிச்சமாகும். இத்திட்டம் மூலம் பல லட்சகணக்கானோர் பயன் பெறவுள்ளார்கள். புதிய திட்டம் மூலம் கட்டணம் செலுத்தி பெறப்படும் அட்டைகள், Fastag அட்டையுடன் இணைக்கப்படும் என்று நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரூபாய் சின்னத்தை நீக்கியது பிரிவினைவாத அரசியல்: தமிழக அரசு மீது சீதாராமன் கடும் விமர்சனம்
வெள்ளி 14, மார்ச் 2025 10:43:27 AM (IST)

யூடியூப் பார்த்து தங்கத்தை கடத்தினேன் : நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்
வியாழன் 13, மார்ச் 2025 5:23:43 PM (IST)

ஹோலி பண்டிகை பேரணி: 10 மசூதிகளை திரையிட்டு மூட உத்தர பிரதேச அரசு உத்தரவு!
வியாழன் 13, மார்ச் 2025 12:48:47 PM (IST)

மும்மொழி கொள்கையில் திமுக எம்.பி.க்கள் இரட்டை வேடம்: நிர்மலா சீதாரமன் ஆவேசம்
வியாழன் 13, மார்ச் 2025 11:12:57 AM (IST)

செளந்தர்யா திட்டமிட்ட கொலை: நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பு - ஆட்சியரிடம் புகார்!
புதன் 12, மார்ச் 2025 3:56:56 PM (IST)

பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது!
புதன் 12, மார்ச் 2025 11:25:07 AM (IST)
