» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்!

வெள்ளி 7, பிப்ரவரி 2025 12:08:14 PM (IST)



தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கனிமொழி எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. திமுக எம்.பிக்கள் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீர்வு வேண்டும்! தீர்வு வேண்டும்!! மீனவர்களின் கைதுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!! தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்!! என முழக்கமிட்டு ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து எம்.பிக்கள் போராட்டம்.

முன்னதாக, மீனவர் பிரச்சனை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி நோட்டீஸ் அளித்துள்ளார். தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை படையால் கைது செய்யப்படுவது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி திமுக நோட்டீஸ் அளித்துள்ளார். இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது, இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு மட்டும் இலங்கை கடற்படையால் 530 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டு 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை சிறைகளில் தற்போது 97 மீனவர்கள் உள்ளனர்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 216 படகுகள் இலங்கை வசம் உள்ளது. மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதும், அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்காமல் இருப்பதும், கடலோரப் பகுதியில் வாழும் மீனவ சமுதாயத்தினருக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, நமது தமிழ்நாடு மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவதை நிறுத்தவும், இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்படகுகளையும் விடுவிக்க வழி செய்யும் வகையில், உடனடியாக உயர்மட்ட தூதரக நடவடிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory